வீடு தேடி ரேஷன் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும், அதற்கான நிதி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கும் நடைமுறை இனி இருக்காது என்றும், விவசாயிகள் லஞ்சம் தரத் தேவையில்லை என்றும் கூறியுள்ள அவர், முதல்வர் விஜய்யின் அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.