மின்சாரத்துறையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் என
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கேரளாவில் மின்சாரம் குறைந்த விலைக்குக் கிடைக்கும் நிலையில், தமிழகத்தில் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள DVAC அமைப்பால் நியாயமான விசாரணை நடத்த முடியாது என்பதால், சுதந்திரமான ஆணையம் மூலம் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.