இந்திய அரசுக்கு வருமானத்தை வாரி வழங்கும் தமிழ்நாட்டை, மத்திய அரசு வஞ்சிப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று (பிப்.4) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ மத்திய பட்ஜெட்டில் பெயருக்குக் கூட தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை. தேர்தல் வந்தாலும் கூட பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், இதே தேர்தல் நேரத்தில் பீகார், ஒடிசா மாநிலங்களுக்கு அதிகமான அறிவிப்புகளை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது” என விமர்சித்தார்.