இதயம் குழும நிறுவன தலைவர் காலமானார்

26பார்த்தது
இதயம் குழும நிறுவன தலைவர் காலமானார்
பிரபல இதயம் எண்ணெய் நிறுவனத்தின் நிறுவனர் வி.ஆர்.முத்து (72), உடல்நலக்குறைவால் நேற்று (மார்ச் 4) காலமானார். விருதுநகரில் பிறந்த இவர், 1986-ல் தந்தையுடன் இணைந்து இதயம் நல்லெண்ணெய் பிராண்டைத் தொடங்கி, அதை உலகளவில் பிரபலமாக்கினார். இவரது தலைமையில் இதயம் குழுமம் கடலை எண்ணெய் மற்றும் பிற சமையல் எண்ணெய் வகைகளையும் அறிமுகப்படுத்தி, 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. தொழிலதிபர் மட்டுமல்லாமல், ரோட்டரி சங்க ஆளுநராகவும், கல்வி நிறுவனங்களின் அறங்காவலராகவும் சமூகப் பணிகளைச் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி