தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின், "
திமுக கூட்டணி தயவில் ஆட்சியமைத்த தவெக, அதிமுக எம்.எல்.ஏ-க்களைப் பெட்டி கொடுத்து வாங்கியுள்ளது. சட்டப்பேரவையில் தவெகவினர் பாட்டுப் பாடுகிறார்கள்; இனி சண்டை, நடனக் காட்சிகள் மட்டுமே பாக்கி. தவெக ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே நடக்கிறது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்குக் காரணமான இந்த அரசுக்கு அக்.6-ல் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.