வேல்முருகன் முன்னிலையில் தவாகவில் இணைந்த மாற்றுக்கட்டசியினர்

37பார்த்தது
வேல்முருகன் முன்னிலையில் தவாகவில் இணைந்த மாற்றுக்கட்டசியினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று (நவ., 15) நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணைப்பு விழாவில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'தவாக கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு, தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி