நாட்டின் மொத்த விலைவாசி குறியீடு கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, ஏப்ரல் 2026ல் 8.3% ஆக பதிவாகியுள்ளது. மொத்த விற்பனை விலை அடிப்படையிலான இந்த பணவீக்க உயர்வுக்கு உலகளாவிய
போர் பதற்றம், கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி செலவுகள் அதிகரித்தது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக உணவுப் பொருட்கள்,
போக்குவரத்து, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் விலை உயர்வு ஏற்பட்டு, பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.