அதிமுகவின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் செங்கோட்டையன். அதிமுகவை ஒன்றிணைக்க முயறிசித்த அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதுகுறித்து கோவையில் இன்று (பிப்.05) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், “செங்கோட்டையன் முதிர்ந்த அரசியல்வாதி. ஆனால், காலத்தின் கொடுமை காரணமாக, இப்போது கட்சி ஆரம்பித்துள்ள நடிகரோடு சேர்ந்திருக்கிறார் என்பது வேதனையாக இருக்கிறது” என்றார்.