குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளையுடன் நிறைவு

38பார்த்தது
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளையுடன் நிறைவு
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு கடந்த அக்., 6ஆம் தேதி வெளியானது. இதற்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை வியாழக்கிழமை (நவ., 5) நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி