நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் கிராமத்தில், மூன்றாம் வகுப்பு மாணவி ரக்ஷிதா (8 வயது) பள்ளியின் நூற்றாண்டு விழா நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயரச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த முதல்வர், உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.