சத்தீஸ்கரில் சுனிதா என்ற பெண், தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது, குரங்கு ஒன்று குழந்தையைப் பறித்துச் சென்று கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை சுமார் 10 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்காமல் மிதந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை அணிந்திருந்த டயப்பர் தண்ணீரை உறிஞ்சி ‘லைஃப் ஜாக்கெட்’ போல செயல்பட்டதாலேயே உயிர் தப்பியது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.