VAO-க்களை ஒருமையில் திட்டிய மாவட்ட ஆட்சியர்.. போராட்டத்தை தொடர்ந்து மன்னிப்பு கோரினார்

17பார்த்தது
VAO-க்களை ஒருமையில் திட்டிய மாவட்ட ஆட்சியர்.. போராட்டத்தை தொடர்ந்து மன்னிப்பு கோரினார்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, VAO-க்களை ஒருமையில் திட்டியதாகவும், செல்போனை பிடுங்கி எறிந்ததாகவும் புகார் எழுந்தது. இதை கண்டித்து VAO-க்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (நவ.26) உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக, இனிமேல் இதுபோன்று நடக்காது என கூறி, ஆட்சியர் அழகுமீனா மன்னிப்பு கோரியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி