மராட்டிய மாநிலத்தின் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் இளைஞர் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக மதுபோதையில் இருந்த பிரகாஷ் கார்டிலே (19) என்ற இளைஞர் தண்டவாளத்தில் படுத்து உறங்கினார். ரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகளும் அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர். தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பின் ரயில் புற்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.