நேபாள, இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகரான சுனில் தாபா இன்று (பிப்., 07) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. தாபா சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தபதாலியில் உள்ள நோர்விக் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இவர் இந்தியில் புகழ்பெற்ற வெப் சீரிஸ் ஆன 'தி ஃபேமிலி மேன் 3' உள்ளிட்டவற்றில் நடித்து கவனம் பெற்றுள்ளார். தமிழில் விக்ரமின் '10 எண்றதுக்குள்ள' படத்திலும் நடித்துள்ளார்.