மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான "பைசன்" படத்தை பார்த்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது படக்குழுவை பாராட்டி பேசிய அவர், "எங்க அப்பா நான் கபடி விளையாட செல்கிறேன் என்றால் அரிவாளை எடுத்துக் கொண்டு விரட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் நான் நன்றாக விளையாடிய விதம் அவருக்கு பிடித்துப்போக, அவரே உன் நண்பர்களுடன் கபடி விளையாட போ என அனுப்பிவைப்பார்" என கூறினார்.