நடிகர் சங்க தலைவராக தேர்வான முதல் நடிகை

8498பார்த்தது
கேரள திரைப்பட நடிகர் சங்கமான 'AMMA' அமைப்பின் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வாகியுள்ளார். இவர் எதிர் வேட்பாளரான நடிகர் தேவனை தோற்கடித்து தலைவர் பதவியை வென்றுள்ளார். அம்மாநில சினிமா வரலாற்றில் பெண் ஒருவர் தலைவராக வருவது இதுவே முதல்முறையாகும். அரவிந்த் மற்றும் நீனா குருப் ஆகியோர் நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இணைச் செயலாளர் பதவிக்கு அன்சிபா ஹசன் போட்டியின்றி தேர்வானார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி