'தசரா' வெற்றிக்கு பிறகு நடிகர் நானி- இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா மீண்டும் இணைந்துள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் முதல் பாடல் புரோமோ இன்று (பிப்.23) வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள ‘ஆயா ஷேர்’ பாடலில் நானியின் மிரட்டலான தோற்றம் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.