சிந்து மற்றும் கங்கை நதிகளின் நீரோட்ட நிலை தலைகீழாக மாறி வருவதாக காந்திநகர் ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. Earth's Future இதழில் வெளியான ஆய்வின்படி, 40 ஆண்டுகால தரவுகளை ஆய்வு செய்ததில் சிந்து நதி படுகையில் நீர்வரத்து 8% அதிகரித்துள்ள நிலையில், கங்கை நதி படுகையில் நீர்வரத்து 17% குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.