கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. நாளை (ஜுலை 28) காலை இதற்கான மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக மேல்முறையீட்டு மனுவை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.