தவெக அரசு ரீல்ஸ் செய்து ஆட்சி செய்வதாக பல்வேறு கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது
திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் தவெக அரசை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை தவெக அரசு Reels ஆட்சி. இன்னும் Reels மோகத்தில்தான் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அரசும் இருக்கிறது. உண்மையாக, மக்களுக்கான ரியல் ஆட்சியாக இதுவரை அவர்கள் பணிகளை தொடங்கவில்லை. இனியும் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை” என்றார்.