தவெக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “காங்கிரஸ் ஆதரவுடன் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படும் தவெக அரசு, கா்நாடகாவிற்கு எதிராக திடமான நடவடிக்கை எடுக்குமா?. தமிழகத்தின் உாிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அதிமுக ஒருநாளும் அனுமதிக்காது” என குறிப்பிட்டுள்ளார். மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உாிமை இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியதை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.