பிரதமர் மோடி தலைமையிலான மத்திய
பாஜக அரசு விரைவில் முடிவுக்கு வரும் என்று திரிணாமூல்
காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் ஏழை மற்றும் சாலையோர வியாபாரிகளின் கடைகள் இடிக்கப்படுவதைக் கண்டித்துப் பேசிய அவர்,
பாஜக அரசு ஏழைகளின் வாழ்வாதாரத்தை நசுக்குவதோடு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையும் முற்றிலுமாக சிதைத்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.