மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத்தை விரிவுபடுத்தும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் இன்று (அக்.02) தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தை தவெக MLA-க்கள் முஸ்தபா மற்றும் கல்லணை தொடங்கி வைத்து பேட்டி அளித்தனர். அப்போது, “பெண்கள் ஓசி பஸ்சில் செல்கிறார்கள் என திமுகவைப் போல பேசும் ஆட்சி தவெக ஆட்சி இல்லை” என்று முஸ்தபா தெரிவித்தார். பெண்களின் பயணச் சுதந்திரம் மற்றும்
வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக MLA-க்கள் கூறினர்.
நன்றி: பாலிமர்