'கலைக்காக அரசு இன்னும் பல சாதனைகளை புரியும்’ - முதலமைச்சர் பேச்சு

51பார்த்தது
'கலைக்காக அரசு இன்னும் பல சாதனைகளை புரியும்’ - முதலமைச்சர் பேச்சு
‘தமிழ்நாட்டில் உள்ள கலைக்காக இன்னும் பல சாதனைகளை திமுக அரசு புரியும்’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். `சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா'வில் பேசிய அவர், "சென்னை சங்கமம் வெற்றி சங்கமமாக தொடங்கியிருக்கிறது. கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை பறைசாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். வரும் காலங்களில் திமுக அரசு கலைக்காக இன்னும் பல சாதனைகளை புரியும். அதற்கான உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். கலையை வளர்ப்போம், தமிழ்நாடு வெல்லும்" என்றார்.