கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்., 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த நிலையில், கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தற்போது, வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரை தனித்தனியாக சந்திக்காமல் திருமணம் மண்டபம் போன்ற இடத்தில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.