பெரியாரின் அண்ணன் மகனான ஈ.வெ.கி. சம்பத், 1949-ல் அண்ணாதுரையுடன் இணைந்து
திமுக-வை உருவாக்கிய முக்கியத் தலைவர்களில் ஒருவர். பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 1961 ஏப்ரலில் திமுகவிலிருந்து விலகி, கண்ணதாசன், சிவாஜி கணேசன், பழ. நெடுமாறன் ஆகியோருடன் இணைந்து தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினார். 1962 தேர்தலில் வெற்றி பெறாததால், 1964-ல் இக்கட்சியை இந்திய தேசிய
காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.