'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டத்தின் தொடக்க விழா ரத்து

13217பார்த்தது
'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டத்தின் தொடக்க விழா ரத்து
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை (மே 29) நடைபெற இருந்த 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினமே திட்டம் தொடங்கப்பட இருந்த நிலையில், நேற்றும் ரத்து செய்யப்பட்டிருந்தது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய பரிணாமத்தில் மகளிர் காவல்துறையில் சிறப்பு பிரிவாக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' செயல்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி