மேற்காசியப் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் உச்சமாக, வர்த்தக வார இறுதி நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.95.94 காசாகச் சரிந்து வர்த்தகமாகியுள்ளது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.