நாம் தினசரி பயன்படுத்தும் இணைய தரவுகளில் (Data) 95% செயற்கைக்கோள்கள் மூலமாக இல்லாமல், கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மூலமாகவே பயணிக்கின்றன. கண்ணாடி இழைகளால் ஆன இந்த கேபிள்கள் சேதமடையாமல் இருக்க, பிளாஸ்டிக் மற்றும் எஃகு போன்ற பல பாதுகாப்பு அடுக்குகளால் இவை சுற்றப்பட்டுள்ளன. இவை பிரத்யேக கப்பல்கள் மூலம் கடலின் ஆழமான பகுதிகளில் பதிக்கப்பட்டும், ஆழமற்ற கடலோர பகுதிகளில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டும் பாதுகாக்கப்படுகின்றன.