சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில், பொதுமக்கள் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். தவெக எம்.எல்.ஏ பல்லவி முன்னிலையில் பேசிய மக்கள், “பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் இதற்கு பயப்படுவதில்லை” என குற்றம்சாட்டினர். மேலும், குடிநீரின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.