திமுகவுக்கு தலைவலியாக மாறும் ஆட்சியில் பங்கு விவகாரம்

5077பார்த்தது
திமுகவுக்கு தலைவலியாக மாறும் ஆட்சியில் பங்கு விவகாரம்
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், 'தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?' என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வியெழுப்பியுள்ளார். 'கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என்பதை சிலர் கிளப்பி விடுகின்றனர்' என்று முதலமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார். அவரின் பேச்சு எதிர்வினையாற்றியுள்ள மாணிக்கம் தாகூர், திமுக தலைமைக்கு அழுத்தம் தரும் வகையில், எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி