தமிழ்நாட்டில் கரூர் தொகுதியில் அதிகளவில் வேட்பாளர்கள் போட்டி

3பார்த்தது
தமிழ்நாட்டில் கரூர் தொகுதியில் அதிகளவில் வேட்பாளர்கள் போட்டி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 89 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனை தொடர்ந்து பெரம்பூர் (47), கோவை தெற்கு (44), கொளத்தூர் (43) மற்றும் பரமத்தி வேலூர் (43) ஆகிய தொகுதிகளில் அதிகப்படியான வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் 40 பேர் போட்டியிடும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த முறை தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி