கள்ளக்காதலியை கொடூரமாக கொன்று புதைத்த காதலன்

3பார்த்தது
கள்ளக்காதலியை கொடூரமாக கொன்று புதைத்த காதலன்
ஆந்திராவின் ஏலூரு மாவட்டத்தைச் சேர்ந்த விஷாலி (36) ஏப்ரல் 18ஆம் தேதி உறவினர் வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர். பால் வியாபாரி பிரான்சிஸ் ஷவுரி (36) உடன் விஷாலிக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. பணம் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, பல்லேர்லமுடி அருகே கால்வாய் பகுதியில் விஷாலியை சரமாரியாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அங்கேயே புதைத்துள்ளார். போலீசார் தற்போது பிரான்சிஸ் ஷவுரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி