நடிகர் ரஜினிகாந்த், பாக்யராஜின் 50 ஆண்டுகால திரை வாழ்வை முன்னிட்டு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டபோது, சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தான் ஆவேசமாக பேசியதாகவும் கூறினார். பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது சிலர் தன் தலையில் தாக்கியதாகவும் கல்லால் அடித்ததாகவும் கூறிய அவர், நடிகர் பாக்யராஜ் தான் தன்னை காப்பாற்றினார் என கூறியுள்ளார்.