இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று (ஜூன்.10) காலமான நிலையில், இன்று (ஜூன்.11) தேனியில் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இந்நிலையில், அவரது மறைவையொட்டி, பாரதிராஜா உடலுக்கு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர். கட்சிக் கொடியை வைத்து அஞ்சலி செலுத்திய சீமான், தமிழ் சினிமாவிற்கும் தமிழர் சமூகத்திற்கும் பாரதிராஜா ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.