நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். குறிப்பாக, பெற்றோரின் குரலை வைத்தே மனநிலையை கணிப்பதுடன், நீங்கள் மற்றவர்களை நடத்தும் விதத்தையும் கவனிப்பர். மேலும், நீங்கள் பிரச்சனையை எப்படி கையாள்கிறீர்கள் என்பதையும், நீங்கள் கற்பிப்பதை முதலில் பின்பற்றுகிறீர்களா என்பதையும் குழந்தைகள் நோட் செய்கிறார்கள். எனவே, குழந்தைகள் முன்னிலையில் கவனமாகவும், பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.