வடகிழக்குப் பருவமழை காலமானது ஆண்டுதோறும் அக்டோபர் 3ஆவது வாரம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை இருக்கும். ஆனால் நடப்பாண்டில் ஜனவரி மாதம் வரை வடகிழக்குப் பருவமழை நீடித்து வந்தது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி கேரளா, கடலோர ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 100 நாட்கள் மேலாக மழை பெய்த நிலையில், இயல்பை விட 33% அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.