மேட்டூர் அணையில் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்ட பிறகு, முதலமைச்சர்
விஜய் அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு நேரில் சென்றார். அங்குள்ள மூதாட்டி முதல்வரின் கையைப் பிடித்துத் தனது கோரிக்கைகளை முன்வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி, "திடீரென முதல்வர் வந்ததால் என்ன பேசுவதெனப் புரியவில்லை; உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் கண்ணு என அவரிடம் அன்போடு கூறினேன்" என்றார்.