காவல் துறை உதவியாளர் (ஆர்டர்லி) முறையை ஒழிக்க 2026 ஜனவரி 21-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. DRO, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இடம்பெறும் இந்த குழுக்கள், ஆர்டர்லிகள் தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யும்.