நானி நடிப்பில் வெளியான 'தி பாரடைஸ்' திரைப்படம், முதல் நாளில் உலகளவில் ரூ.88 கோடி வசூல் செய்துள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கிய இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 24-ம் தேதி வெளியானது. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிப்பில், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.