மதுராந்தகம் அருகே கீழாமூர் கிராமத்தில் முத்தாலு (75) என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழுக்கி விழுந்து இறந்ததாகக் கருதப்பட்ட மூதாட்டியின் நகை காணாமல் போனதால் அவரது மகன்கள் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், தவெக கிளை பொறுப்பாளர் வாசுதேவன் நகையைத் திருடி மூதாட்டியைக் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.