எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், 1988 ஜனவரி 7-ஆம் தேதி அதிமுக ஜானகி அணி சார்பில் வி.என். ஜானகி ராமச்சந்திரன் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், சட்டமன்றத்தில் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், 23 நாட்களிலேயே (ஜனவரி 30) அவரது ஆட்சி கலைக்கப்பட்டுத் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.