தவெக தலைவர் விஜய் இன்று (ஏப்.8) திருநெல்வேலியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக தலைவர் ஸ்டாலின், சில பல கோடிகளைக் கொடுத்து தமிழக காங்கிரஸை பையில் போட்டுக்கொண்டார். ஆனால், உண்மையான காங்கிரஸார் நம்ம பக்கம் நிற்கிறது. சிறுபான்மை மக்களுடனான திமுகவின் சாயம் வெளுத்துப் போய்விட்டது. இந்த விஜய் மதச்சார்பற்ற கொள்கையோட உண்மையான ஒரு முகமாக இருப்பதாலும், சிறுபான்மை மக்கள் விஜய் பக்கமே நிற்கிறார்கள்” என்றார்.