அமெரிக்க இடைத்தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி சந்தித்த தோல்விக்கு ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வராததே காரணம் என அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, '
அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையிலிருந்து தடம் மாறியது மற்றும் தற்போதைய இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு ஆகியவையே இத்தோல்விக்கான காரணங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கள் சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.