அதிமுக கூட்டணியை பலப்படுத்த தீவிர ஆலோசனை நடந்து வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (பிப்.8) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காங்கிரசுக்கும் திமுகவிற்கும் உட்கட்சி பூசல் வந்துவிட்டது. கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது உண்மைதானே" என்றார். மேலும், "சில கட்சிகள் வருமென்று சொன்னேன்; வந்தாச்சு. இன்னும் சில கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.