பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது

13பார்த்தது
பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல், பௌர்ணமியை முன்னிட்டு இன்று சுமார் 100 அடி வரை உள்வாங்கியது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்து, அலைகளின்றி கடல் குளம் போல் காட்சியளித்தது. இந்த விசித்திர நிகழ்வைக் காணவும், கோடை விடுமுறையை முன்னிட்டும் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.