சமையல் கலைஞர்கள் ஏப்ரான் அணிவதற்கு பின்னால் ஆடைகளில் கறை படியாமல் தடுப்பது மட்டுமே காரணம் அல்ல, அதில் முக்கிய சுகாதார காரணமும் ஒளிந்துள்ளது. சமைக்கும் போது தற்செயலாக தூசி, வியர்வை அல்லது உடம்பில் உள்ள கிருமிகள் உணவில் விழுந்துவிடாமல் பாதுகாக்கவும், தீ விபத்துகளில் இருந்து உடலை தற்காத்து கொள்ளவும் இது உதவுகிறது. மேலும், சமையலுக்கு தேவையான சிறு கரண்டிகள் மற்றும் துணிகளை வைத்து கொள்ளவும் இந்த ஏப்ரான்களில் உள்ள பைகள் பெரிதும் பயன்படுகின்றன.