உலகில் வாழும் பறவைகளிலேயே மிகப்பெரியது நெருப்புக்கோழி ஆகும். இது சுமார் 8 அடி உயரம் வரை வளரக்கூடியது. இப்பறவையால் பறக்க முடியாது என்றாலும், இதன் நீண்ட கால்களை பயன்படுத்தி மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் ஓட முடியும். இந்த வேகமே, தனது நீண்ட கால்கள் மற்றும் 2 விரல்களில் உள்ள கூர்மையான நகங்களை பயன்படுத்தி எதிரிகளை தாக்கி தன்னை தற்காத்துக்கொள்ளும் வலிமையான ஆயுதமாகும். இது இடும் முட்டைகளே உலகிலேயே மிகப்பெரிய முட்டைகளாகும்.