கிச்சா சுதீப்பின் 'மார்க்' படப்பிடிப்பு நிறைவு

2644பார்த்தது
கிச்சா சுதீப்பின் 'மார்க்' படப்பிடிப்பு நிறைவு
கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப், விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் தனது 47வது திரைப்படமான 'மார்க்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் வைரலாகி வருகிறது. 'நான் ஈ', 'அருந்ததி' போன்ற படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த கிச்சா சுதீப்பின் நடிப்பில் கடைசியாக வெளியான 'மேக்ஸ்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்புடைய செய்தி