இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாகப் படத்தின் பின்னணி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.